எடுத்ததும் வைத்ததும்

மண் சட்டியில் இருந்த நெருப்புத் துண்டுகளை எடுத்து அப்பாவின் நெஞ்சில் வைக்கச் சொன்னார்கள். மின் மயானமானாலும் சடங்குகளை விட்டுவிடுவதற்கில்லை. அவருக்கு அது சுடப் போவதில்லை என்று தெரியும். இருந்தாலும் கஷ்டமாக இருந்தது. வாழ்நாளில் எவ்வளவு முறை அவருக்கு அப்படிப்பட்ட சூட்டைத் தந்திருப்பேன் என்று எண்ணிப் பார்க்கத் தோன்றியது. இருக்கும். எப்படியும் ஏழெட்டு முறை. அப்பா கோபித்துக்கொண்டதில்லை. வருந்தியிருப்பார். ஆனால் காட்டிக்கொண்டதில்லை. அவரது ஒவ்வொரு நம்பிக்கையையும் ஒரு தீவிரத்துடன் பொய்ப்பித்துக்கொண்டு வரும் மகனாக அவருக்கு நான் மறைமுகமாக எதையாவது … Continue reading எடுத்ததும் வைத்ததும்